வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வீடு கட்ட வாங்க போகிறீர்களா....?



நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.

சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது. இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

''என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்'' என்று புலம்புவர்கள் ஒருபக்கம்...

''எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்... இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு'' என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்... ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்... ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.


கார்பெட் ஏரியா

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.

பிளின்த் ஏரியா

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.

சூப்பர் பில்ட் அப் ஏரியா

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)

மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்...





என்ன செலவாகும்?

ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது.)

சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்... உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்... நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்...

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்... நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.




கவனிக்க வேண்டியவை..!

கட்டிய வீட்டை வாங்கும்போது!

* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.



சொந்தமாக வீடு கட்டும்போது..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.

நன்றி :

விகடன்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

இயற்கை முறையில் உடல் எடை குறைக்க GM (ஜெனரல் மோட்டார்ஸ்) டயட் திட்ட உணவு




இயற்கை முறையில் உடல் எடை குறைக்க GM (ஜெனரல் மோட்டார்ஸ்) டயட் திட்ட உணவு

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு `டயட்' என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.

எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது.

இந்தியாவிலும் எடைகூடியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒர ு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜூஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால்

5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது.

7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் version:

முதல் கண்டிஷன் :

இதை follow பண்ணும் போது, நீங்க, தண்ணியடிக்கவோ, 'தம்' அடிக்கவோ, மற்ற எந்த விதமான போதை பொருளை சாப்பிடவோ கூடவே கூடாது. காபி, டீ உட்பட!!!!!!!!

2வது கண்டிஷன் :

இதை follow பண்ணும் போது, நீங்க தினமும் 10 தம்ளர் தண்ணி (pure water) குடிக்கணும்.

முதல் நாள் :

இன்னிக்கு முழுவதும் வெறும் பழங்கள் மட்டுமே சாப்பிடணும். வாழைப்பழம் கண்டிப்பா சாப்பிடக்கூடாது. பால் குடிக்க கூடாது. பழங்கள் எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். தர்பூசனி (water melon) நிறைய சாப்பிடுவது நல்லது. கலோரி அளவு குறைவாக உள்ள பழங்களை சாப்பிடுவது நல்லது.

2வது நாள் :

காலை உணவுக்கு ஒரு முழு வேக வைத்த உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும். இன்னிக்கு முழுவதும், வெறும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட் வேண்டும். பச்சையாகவோ, அல்லது, வேக வைத்தோ சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். எண்ணை, தேங்காய் தவிர்க்கவேண்டும். இன்றும் பால் கூடாது.

3வது நாள் :

இன்னிக்கு முழுவதும் காய்கறிகளும், பழங்களும் சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பால் கண்டிப்பா சாப்பிடக்கூடாது.

4வது நாள் :

இன்று 8 வாழைப்பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டும். இது தவிர, 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும். 1 கப் வெஜிடபிள் சூப் சாப்பிட வேண்டும்.

5வது நாள் :

இன்று 1 கப் சாதம், 6 தக்காளி சாப்பிட வேண்டும். கண்டிப்பாக 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6வது நாள் :

இன்னிக்கு 2ம் நாள் போலவே, காய்கறிகள் சாப்பிட வேண்டும். 1 கப் சாதம் சாப்பிட வேண்டும்.

7வது நாள் :

இன்னிக்கும் 2ம் நாள் போலவே, காய்கறிகள் சாப்பிட வேண்டும். 1 கப் சாதம் சாப்பிட வேண்டும். மற்றும் 1 கப் fruit juice சாப்பிட வேண்டும்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பட்டா, சிட்டா, அடங்கல்...etc என்றால் என்ன தெரியுமா?


பட்டா, சிட்டா, அடங்கல்...etc என்றால் என்ன தெரியுமா?

 சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்

இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:

பட்டா:

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்:

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்:

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.


தேவதானம்:

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.


ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் http://www.tnreginet.net/ என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

ஆங்கிலவழிக் கல்வியும் நீங்களும்…


 
ஆங்கிலவழிக் கல்வியும் நீங்களும்…

கடந்த திங்கட்கிழமை மாலை, இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவை, அரங்கம் ஒன்றில் கேட்க நேர்ந்தது.
ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட பர்மா ரிட்டன் தந்தைக்கு, மும்பையில் பிறந்து, தனது ஏழாம் வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர் சிவா அய்யாதுரை.

“நான் தமிழும் இங்லிஷும் மிக்ஸ் பண்ணி பேசுறேன்” என்று மேடையேறியவர், கிட்டத்தட்ட 98 விழுகாடு ஆங்கிலத்தில்தான் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த சொற்பொழிவு, 100 விழுக்காடு புரியும்படி எளிமையாக இருந்தது.

எனக்கு ஆங்கிலப் புலமை இப்போதுவரை கைகூடவில்லை. அலுவல் நிமித்தமாக பல்வேறு ஆங்கிலக் கூட்டங்களுக்கு சென்றபோதும், மண்டை குழம்பியே வெளியேறியிருக்கிறேன்.

சிவா அய்யாதுரை, 42 வருடங்களாக அமெரிக்காவில் வளர்ந்தவர். அதி புத்திசாலி. அங்குள்ள எம்.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். வெள்ளைக்காரன் உச்சரிப்புதான் அவருடைய உச்சரிப்பும்.
அப்படியிருக்க, எனக்கே புரியும்படி எப்படி உரையாற்றினார்?
நீங்களே முடிவுக்கு வாருங்கள். அப்படியே, இங்குள்ள ஆங்கில மேதாவிகள் கழுத்தறுப்பது குறித்தும்.(ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலமும் எனக்கு புரியாது)

சிவா அய்யாதுரையின் அந்த ஒரு மணி நேர சொற்பொழிவு, மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

“ஒருவன் மிகச்சிறந்த படைப்பாற்றல் மிக்கவனாக வரவேண்டும் என்றால், முதலில் அவன் சுதந்திரமானவனாக வளர்க்கப்படவேண்டும் என்கிறார் சிவா. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் ஓவியங்களை எடுத்துப் பாருங்கள்… பாலியல் சார்ந்து எத்தனையோ தீட்டியிருக்கிறார்கள். எனவே, பின்னாளில்தான் இந்த சுதந்திரம் ஒழிக்கப்பட்டிருக்கிறது. சிறிய வயதில் இருந்தே, பெற்றோர் எனக்கு முழு சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். நியூயார்க் மற்றும் நெவொர்க் பல்கலைக்கழகங்களிலும் அந்த சுதந்திரம் கிடைத்தது.

நான் இமெயில் கண்டுபிடித்தபோது எனக்கு 14 வயது. என்னுடைய துறை தலைவருக்கு 40. பதினான்கு வயது பையனிடம் பொறுப்பை ஒப்படைப்பதா என்று அவர் தயங்கவில்லை. என் அறிவாற்றலைக் கண்டு அவர் பொறாமை கொள்ளவில்லை.ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. இங்கே, மாணவர்களைக் கண்டு ஆசிரியர்களே பொறாமைப்படுகிறார்கள். தலை இருக்க வால் ஆடலாமா என்று கட்டுப்படுத்துகிறார்கள்.” என்று விளக்கியவர், இன்றியமையாத இன்னொரு உண்மையை போட்டுடைத்தார்.

“நான், இமெயிலை கண்டு பிடித்ததை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்காததற்கு காரணம் மிகக் குறுகியது. நான் கருப்பாக இருக்கிறேன். நாடுவிட்டு நாடு பிழைக்க வந்தவன். தமிழன். இதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதாவது, அறிவாளிகள் எனப்படுவோர், குறிப்பிட்ட குடும்பத்தில், சாதியில், நாட்டில், வசிப்பிடத்தில் மட்டுமே இருப்பார்கள் என்று இந்த 2013-வரை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில், xxxxxxx-லிருந்து பேட்டியெடுக்க அந்த ரிப்போர்ட்டர் வந்திருந்தார்(ஆங்கில நாளிதிழ் பெயரை குறிப்பிட்டுச் சொன்னார்). நான், ‘non Brahmin’ என்பதை அவரது எடிட்டரால் நம்ப முடியவில்லையாம். ஒரு பிராமின்தான் இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை செய்வார் என்று அவர் அழுத்தம் திருத்தமாக நம்பிக்கொண்டிருந்தாராம். எனவே, முதலில் இந்த சாதி ஒழியவேண்டும். அதற்கு நிறைய சாதி கலப்பு திருமணங்கள் செய்யவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

சிவாவின் தாய் வழிக் குடும்பம், சித்த மருத்துவத்தில் கை தேர்ந்தது. சிவாவின் பாட்டி, ஒருவருடைய முகத்தை பார்த்தே உடலில் இருக்கும் நோயை கண்டறியும் ஆற்றல் பெற்றிருந்தாராம். எனவே, சித்த மருத்துவத்தால் ஈர்க்கப்பட்ட சிவா, தற்போது ‘மசாசூஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(எம்.ஐ.டி)’யில், பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் பேராசியராக இருக்கிறார்.

சிஸ்டம் விஷுவலைசேஷன் என்பது பாட்டியிடமிருந்து கற்றதுதான்.

இதிலிருந்து, “காட்சிகள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக மனித மூளையில் பதியும்போது, அதுவே ஒரு செயலியாக(programme) மாறிவிடுகிறது. இந்த செயலிதான், கருப்பா இருக்கிறவனுக்கு அறிவு இருக்காது. குறிப்பிட்ட சாதிதான் உயர்ந்தது என்று நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது” என்கிறார் சிவா.

அடுத்ததாக, கல்விமுறை குறித்து பேசினார்.
“ஃபோர்டு கம்பெனில ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிற மாதிரிதான் ஸ்டூடண்ட்ஸை உருவாக்குறாங்க. இந்தியாவில் ஒரு முறை வைத்திருக்கிறார்கள். ‘ஸ்கூல் போகணும், காலேஜ் போகணும், சம்பாதிக்கணும், சாப்பிட்டு தூங்கணும், செத்துடணும் என்பதைப்போல. நமக்கு தேவை ரோபோக்கள் அல்ல. இது நல்லதொரு கல்விமுறையும் அல்ல.

எத்தனையோ திறமை வாய்ந்த மாணவர்கள் ஆசிரியர்களால், அடையாளம் காணப்படாமல் பாதியில் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள், சிலர் குறைந்த மதிப்பெண் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தொழில்முனைவோராக்கவே தமிழகம் வந்திருக்கிறேன்” என்றவர்,

“டி,வியை கண்டுபிடித்தவர் யாரென்று தெரியுமா?” எனக் கேட்டார். அரங்கில், ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னார்கள்.

“இல்லை, டி.வி.யை கண்டுபிடித்தவரும் சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன்தான்.(philo Farnsworth-ஐ குறிப்பிட்டதாக நினைவு). எனவே, அறிவும் திறமையும் எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கும் என்பதற்கு இதுவே சான்று” எனக் குறிப்பிட்டார்.

“இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் உலகம் முழுக்க 180 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டுமாம். இல்லயென்றால், ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டுக் கலவரம் மூளும் என்று எச்சரித்த சிவா,

“இந்த பிரச்னையை சமாளிக்க நமக்குத் தேவை, வேலை கொடுக்கும் தொழில் முனைவோர்கள்(entrepreneur)தான். மாறாக, வேலை தேடுவோர் அல்ல. ஆனால், இன்றைக்கு பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை, தங்களுடைய தேவைக்காக வேலை தேடுவோரை மட்டுமே உருவாக்கி வருகின்றன.” என்கிறார்.

தற்போது தமிழகம் வந்திருக்கும் சிவா, 18 முதல் 21 வயதுடைய திறமையான 12 மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சர்வதேச தொழில்முனைவோர் பயிற்சியளிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

‘innovation corps’ எனப்படும் இந்த திட்டம், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படத் துவங்கும். ஆண்லைனில் இதற்கான விண்ணப்பத்தை தேர்வு செய்து மாணவர்கள் பயன்பெறலாம். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் திட்டம் தொடரும்.

*மேற்கண்ட ஆங்கில சொற்பொழிவை நான் குறிப்பெடுக்கவில்லை. காதால் கேட்டதை வைத்தே மொழி பெயர்த்திருக்கிறேன். “ஆங்கில வழிக் கல்வி அவசியமா?” என்று சிவாவிடம் கேட்டேன்.

"அவசியம்தான். அதற்காக, திருக்குறளை ஆங்கிலத்தில் கற்க வேண்டிய அவசியம் இல்லை. தாய் மொழியில் பாடங்களை கற்றுக்கொண்டு, மொழிப்பாடமாக ஆங்கிலம் படித்தாலே(சரளமாக பேசவும் வேண்டும்) போதும்" என்றார்.

சிவா குறித்து மேலும் அறிந்துகொள்ள(இந்திய அவமானம்) ந.ஜீவா எழுதியுள்ள தினமணி கட்டுரையை http://dinamani.com/weekly_supplements/kadhir/article1342166.ece காணலாம்.

இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா!


 
 
இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா!

இறைவனின் பெரிதான தயவால்,உலகில் வளர்ந்த ஒரு பத்து நாடுகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றேன்.குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி என்னை மலைக்க வைத்தது.வாழ்வில் முதன் முதலாக, நான் பார்த்த வெளிநாடு நாடு ஜெர்மனி.

அந்த தேசத்தை பார்த்த போது, மனதில் அப்படி ஒரு பிரமிப்பு.
நான் பார்த்த வெளிநாடுகளில்,எல்லாவகையிலும் ஜெர்மனியை முதலிடத்தில் வைத்து பார்க்கும் அளவுக்கு,அநேக விடயங்களை அந்த தேசம் எனக்கு கற்று கொடுத்தது.

வெறுமனே தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்களை தாண்டி,மக்களின் ஒழுக்கம், எளிமை, அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு ,சக மனிதனுக்கான மரியாதை, பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் விதம்,அவர்களின் நேர்மை என்று பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

நடு நிசியில் இரண்டு மணி,மூன்று மணி என்று எந்நேரம் வேண்டுமானாலும் தனியாக பயணித்து, வீடு வந்து சேர்ந்த நாட்கள் ஏராளம் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட, உள்ளத்தில் எவ்வித பயமும் இருந்தது கிடையாது.

இந்த நடு ராத்திரியில் திருடர்களின் தொல்லை இருக்குமோ, அல்லது வெளிநாட்டவர் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமோ,
ஒருவேளை நம்மை தாக்கினாலும் தாக்குவார்களோ என்று ஒருநாள் கூட சிந்தித்து பார்க்கும் அளவுக்கு எந்த சூழலும் அங்கு இல்லை.

ஐரோப்பிய நாடுகளில்,பொது வெளிகளில் சுத்தம்,ஆரோக்கியம் என்றால் அதில் ஜெர்மனியை மிஞ்ச இயலாது. சுவிட்சர்லாந்தையும் பொது வெளி சுத்தத்தில் அடித்துக் கொள்ள முடியாது. அப்படி பார்த்தாலும் சுவிட்சர்லாந்தில் பெரும்பான்மை மக்கள் ஜெர்மானியர்களே!

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு பார்த்தால்,தொழில் நுட்பம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, கல்வி, பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் ஜெர்மனி தான் முதலிடம் என்றே சொல்லும் அளவுக்கு, அனைத்து விடயங்களிலும் உயர்ந்து நிற்கிறது.

நண்பர்கள் பொதுவாக என்னிடம் கேட்பது உண்டு. நீங்கள் பார்த்த வெளிநாடுகளிலேயே சிறந்த நாடு எது என்று? சந்தேகம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஜெர்மனி தானென்று
ஒரே ஒரு சிக்கல் எதுவென்றால் மொழி மட்டுமே:) அங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நமக்கு அவர்களின் தாய்மொழி தெரியாது:)

மேற்கத்திய நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு, போக்குவரத்து, கல்வி,பொருளாதாரம்,மருத்துவம்,தொழில் வளர்சிகள்,அடிப்படை பாதுகாப்பு போன்ற பல விடயங்களை பற்றி சிலாகித்து பேசும் போது, நண்பர் ஒருவர் சொன்னார், மேற்கத்திய நாடுகளை நான் பார்த்தது இல்லை. ஆனால் பலமுறை சீனாவை பார்த்து விட்டேன். சீனாவின் வளர்ச்சி மிகவும் அபரிவிதமானது என்றார்.

பீஜிங்,ஷாங்காய் போன்ற நகரங்களை எல்லாம் பார்த்தால், மிரண்டு போவீர்கள் என்று சொன்னார். மேற்கத்திய நாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சீனாவின் வளர்ச்சி இருக்கிறது என்று, பயிற்சிக்காக சீனா வந்த, எங்கள் நிறுவனத்தின் மேற்கத்திய நண்பர்களே சிலாகித்து பேசினார்கள் என்று சொன்னார். அவர்களே விரும்பி விரும்பி நகரத்தின் பல பகுதிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்றார்.

நான் சீனாவுக்கு போனதில்லை. அதனால் அப்படியா என்று கேட்டுக்கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியை மிஞ்சி, ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்கும் என்றால் அதை வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு, சொர்க்க பூமியாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சமீபத்தில் அதே நண்பர், அமெரிக்காவுக்கும் சென்று வந்தார். வந்த பிறகு சொன்னார், அமெரிக்காவை விட சீனா தான் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

காரணம் சீனா தான், புதுசு கண்ணா புதுசு மாதிரி இருக்கிறது. பிரமாண்டத்தில் சீனா, அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது என்று சொன்னார். அவர் பார்த்த இடங்கள் நியூயார்க் அல்லது கலிபோர்னியா போன்ற நகரங்களாக இல்லாமல் இருந்ததால், ஒருவேளை சரியான ஒப்பீடாக இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் நேற்று வேறொரு நண்பரை, அவரது வீட்டில் சந்தித்த பொழுது, மடிக்கணினியில் சில புகைப்படங்களை காட்டினார். தற்போது, வேலை விடயமாக,அடிக்கடி சீனா செல்ல வேண்டி இருக்கிறது.சீனாவை பாருங்கள் என்று சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.
பார்த்தால் அப்படி ஒரு ஆச்சர்யம்.

மேற்கத்திய நாடுகளின் கட்டமைப்பு வசதிகளில்,
எந்த வித்தியாசத்தையும் பார்க்க இயலாத அளவுக்கு சாலைகள், கட்டடங்கள், ரயில் பயணங்கள், துறை முகங்கள், விமான நிலையங்கள் என்று மிக பிரமாண்டமாய் இருக்கிறது சீனா.
மேற்கத்திய நாடுகளில் பார்த்த அத்தனை வசதிகளையும்,அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள் சீனர்கள்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை பொறுத்தது.

தரமான சாலைகள், போக்குவரத்து வசதிகள், மக்களுக்கான அடிப்படை குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள், எல்லோருக்கும் பொதுவான அடிப்படை இலவச கல்வி, எல்லோருக்கும் பொதுவான சட்டமும் ,நியாயமான தண்டனைகளும் அனைத்து விதிகளையும் மக்கள் கடைபிடிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவது,விதி மீறல்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கி மக்களை சரி படுத்துவது, பொது இடங்களில் சுத்தம், திருட்டு வன்முறை போன்ற கொடுஞ்செயல்கள் நிகழாத வகையில் மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வது,ஊழல்,லஞ்சம் போன்ற கேடுகெட்ட சம்பங்கள் கூடுமானவரையில் நடக்காமல் பார்த்துக்கொள்வது, நீதியும் நியாயமும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் காவல்துறை மற்றும் நீதி துறை செயல்படுவது போன்றவற்றை சொல்லலாம்.

இந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியை பார்த்தால் பிரமிக்க தக்க வளர்ச்சியாகவே தோன்றுகிறது.
சீனாவின் அதிவேக ரயில்களில் பயணித்த நண்பர்கள் இருவரும் சொல்கிறார்கள்.

இப்படி ஒரு பயணம்,வேறு எங்கும் வாய்ப்பே இல்லை... சீன ரயில்களின் வேகம் மணிக்கு முன்னூறு கிலோமீட்டர்,நானூறு கிலோமீட்டர் என்று மின்னல் வேகத்தில் இருக்கிறது.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து, நகரத்தின் மையப்பகுதி முப்பது கிலோமீட்டர்.ஆனால் இந்த முப்பது கிலோமீட்டார் தூரத்தை வெறும் எட்டு நிமிடங்களில் இந்த அதிவேக ரயில்களில் மூலம் நீங்கள் கடந்து விட முடியும்.

பீஜிங்கில் இருந்து ஷாங்காய் ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் தூரம். ஆனால் அதிவேக ரயில்கள் மூலம் இந்த தூரத்தை வெறும் நான்கு மணி நேரத்தில் நீங்கள் அடைந்து விட முடியும்.

ஐநூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து,அன்றாடம் வேலைக்கு சென்று வரும் பெரும்பான்மை மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் வேலைக்கு செல்லும் பயண நேரம் என்பது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே.

சிந்தித்து பாருங்கள். இந்தியாவில் இப்படியான அதிவேக ரயில்கள் வந்தால், காலையில் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டு, மாலையில் வீடு திரும்பும் அளவுக்கு நிலைமை மாறி விடும்..

கற்பனையாக இருந்தாலும் கூட சிந்தித்து பார்க்கும் போது எத்தனை மகிழ்வாய் இருக்கிறது பாருங்கள்.

இந்த அதிவேக ரயில்கள் அனைத்தும் சீனர்களே வடிவமைத்து அவர்களே தயாரித்தது. வெளிநாடுகளின் உதவி என்பது சற்றும் கிடையாது.

இந்தியாவில் அதிவேக ரயிலின் வேகம் என்பது நூறு கிலோமீட்டர் என்கிறார்கள். ஆனால் சராசரி வேகம் என்பது எண்பது கிலோமீட்டர் தான்.

2020 க்குள் சீனாவின் முக்கிய வழித்தடங்கள் அனைத்தையும், இந்த அதிவேக ரயில்கள் மூலமே சமாளிக்க போவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கிட்டதட்ட இருபதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, இது போன்ற அதி வேக ரயில்கள் மூலம் இணைக்க போவதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்களின் அடுத்த பத்தாண்டுகள் திட்டத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும் போல் இருக்கிறது.

சீனாவை போல, தரமான சாலைகள் இந்தியாவில் இருக்கிறதா என்று தேடி பார்த்தாலும் கிடைக்காது.

ஆராய்ச்சி படிப்புகளுக்கென்று, கடந்த சில ஆண்டுகளில் சீனா செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்கை கூட இந்தியா செலவு செய்யவில்லை. அதற்கான திட்டுமிடுதல்கள் இல்லை. 2011 இல் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அவர்கள் செலவிட்ட தொகை நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் நாம் ஒரு பத்து பில்லியன் டாலர்கள், செலவழிப்பதே மிக அதிகம்.

இப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அதீத அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு அனைத்து தொழில்களிலும், ஆராய்ச்சிகளிலும், தயாரிப்புகளிலும் சீனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

குண்டூசி முதல் ஏவுகணை வரை அத்தனையும் சீனர்களின் சொந்த தயாரிப்புகள்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும், அத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சீன தயாரிப்புகளே.

நாம் குடிசை தொழிலாக ஊறுகாய் அல்லது பொறி உருண்டை செய்வது வழக்கம். ஆனால் சீனாவில் குடிசை தொழிலாய் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்வதும், செல்போன்கள் செய்வதுமாய் இருக்கிறார்கள்.

அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆடைகள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மடிக்கணினி முதற்கொண்டு அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகு பொருட்கள், அனைத்தும் சீனா தயாரிப்புகள் என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் அல்லது இந்திய தயாரிப்புகள் என்னவென்று பார்த்தால் பெரிய கேள்விகுறி?

கொஞ்சம் உணவு பொருட்கள், கொஞ்சம் ஆடைகள் இதை தாண்டி உலக அரங்கில் இந்தியாவின் தயாரிப்புகள் என்னென்ன?

உலகநாடுகள் பலவற்றில், சீன பொருட்களுக்கென்று பல பெரிய பெரிய அங்காடிகளை திறந்திருக்கிறார்கள். இன்று இந்தியாவில் கூட பயன்படுத்தப்படும் பல பொருட்கள் சீன தயாரிப்புகள்.

அது கைபேசியாக இருந்தாலும் சரி, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசு முதற்கொண்டு அனைத்தும் சீன தயாரிப்புகளாய் தான் இன்று இந்தியாவில் வலம் வருகிறது.

இந்தியாவின் அடிப்படை விவசாயத்தை செய்யவோ, அதை ஊக்குவிக்கவோ இந்த தேசமும், ஆட்சியாளர்களும் தாயாராக இல்லை. உணவுக்கும் கூட நாம் இனி அடுத்தவன் கையை ஏந்த வேண்டிய காலம் சீக்கிரமே வரும்.

தொழில்களை,விவசாயத்தை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முயல்வதற்கு பதிலாக, சிறு விவசாயிகள் எல்லாம் விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அமைதியாக வேறு வேலைகள் பார்த்து விட்டு போங்கள் என்று சொல்லும், ஒரு ரோபோ பிரதமரை தான் நாம் வைத்திருக்கிறோம்,மிகப்பெரிய பொருளாதார மேதை என்று பெருமை பீத்திக் கொண்டு.

உலக அரங்கில், சீன ராணுவம் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவம். ராணுவ தளவாடங்கள், அனைத்திலும் உலகில் எந்த நாட்டோடும் போட்டி போட்டு கொண்டு நிற்கிறார்கள். அனைத்தும் சொந்த தயாரிப்புகள்.

விண்வெளி ஆராய்ச்சியா, ராக்கெட் தயாரிப்பா, செயற்கை கோள்களா, ஏவுகணைகளா எதுவாக இருந்தாலும் அவர்களே சொந்தமாக தயாரிக்கிறார்கள்.

அமெரிக்கர்கள், ரஷ்யர்களுக்கு போட்டியாக, இன்னும் பல இடங்களில் அவர்களை முந்திக் கொண்டு நிற்கிறார்கள்.

சமீபத்தில் செய்தி தாள் ஒன்றில் படித்தேன். குறி பார்த்து தாக்கும் அதி வேக ஏவுகணைகள் பலவற்றை சீனர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.
இதுவரை அமெரிக்கர்கள் வைத்திருந்த அதிவேக ஏவுகணைகளின் வேகத்தை விட,சீனர்களின் தயாரிப்பு பல மடங்கு என்று, அமெரிக்கர்களே கவலைப்பட்டதாய், செய்திகளில் படித்தேன்.

இந்தியாவின் அனைத்து விண்வெளி ஆராய்ச்சி,ஏவுகணை, அணு தொழில் நுட்பம் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கியதாகவோ, அல்லது கூட்டு முயற்சியாக தான் இன்று வரை இருக்கிறதேயன்றி, சீனாவை போல தன்னிச்சையாக இயங்க கூடியதாக இல்லை.

உலகின் அனைத்து தயாரிப்புகளும் இன்று சீனாவில் தான் தயாராகிறது என்ற அளவில் சீனா இருக்கிறது.

உலக வர்த்தகத்துக்கு, ஆங்கிலம் மிகவும் முக்கியம் என்று உணர்ந்த சீனர்கள் இன்று அதி வேகமாக ஆங்கிலத்தை விரும்பி படிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளில், சீனாவில் அதிக அளவில் விற்ற புத்தங்களின் பட்டியலில், ஆங்கில டிக்சனரி தான் முதலிடம் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலத்தை தீவிரமாக படித்து வருகிறார்கள்.

இந்திய தாயாரிப்புகள் எதுவும் உலக சந்தையில் இல்லாதிருக்க,அப்படி ஒரு உற்பத்தி வருமானம் வராமல், வெளிநாடுகளின் மென்பொருள் துறையை மட்டுமே நம்பிக் கொண்டும்,பொருட்களின் உற்பத்திக்கு பதிலாக, அந்நிய முதலீடுகளை நேரடியாக இந்தியாவில் வரவைத்துக் கொண்டு,இதோ பார் நாங்கள் வளர்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றால், கூடிய விரைவில் நம் பொருளாதாரம் சிதைந்து போகும். சீனாவை போல ஒரு வலுவான பொருளாதரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாம் பொருட்களை தயாரிக்க வேண்டும்.
உலக சந்தையில் இந்திய பொருட்கள் விலை போக வேண்டும்.

சீனாவில் மின்தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் தயாரிக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் இயற்கை மற்றும் சூரிய மின்சாரம் மூலம் நாட்டின் மொத்த மின்சார தேவையில் முப்பது சதவிகிதத்தை எட்டிபிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

இன்று வரை அறுபது விழுக்காடு அனல் மற்றும் புனல் மின்சாரம் தான். உலக நாடுகள் எல்லாம் இயற்கை மின்சாரம் என்று சிந்திக்கும் போது, இந்தியா மட்டும் அணு மின்சாரம் தான் சிறந்தது என்று இறுமாப்போடு திரிகிறது.இத்தனைக்கும் இந்திய அணு உலைகள் இந்தியாவின் சொந்த தயாரிப்பு இல்லை. அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விலைக்கு வாங்கப்படுகிறது.

சொந்தமாக அணு உலைகளை தயாரித்தாலும்,கூட மாற்று மின்சாரத்தில் அதிக அக்கறை எடுக்கிறார்கள் சீனர்கள்.

நடப்பு ஆண்டு கணக்கின் படி,இந்தியாவில் இன்னும் நாற்பது விழுக்காடு கிராமங்களுக்கு மின்சாரம் போய் சேரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சீனா போன்ற சர்வாதிகார(கிட்டத்தட்ட) நாட்டில் மக்கள் நலன் சார்ந்து, மக்களுக்கு எது நன்மை என்று சிந்தித்து மக்களுக்காக செயல்படுகிறார்கள்.ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டே,மக்கள் விரோத நடவடிக்கைகளில், மக்கள் விரும்பாத செயல்களை, திட்டங்களை மக்களிடம் புகுத்துவது தான் இந்தியாவின் அழகே!

மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் போட்டிகளை, சீனாவில் சில ஆண்டகளுக்கு முன்பு நடத்தினார்கள். உலக நாடுகள் பலவும் வியந்து போகும் அளவுக்கு, மிக நேர்த்தியாக நடத்திக் காட்டினார்கள். போட்டி நடத்தியதோடு மட்டுமல்ல, உலக அரங்கில் அதிக பதக்கங்களை வென்றும் காட்டினார்கள் சீனர்கள். ஆனால் ஒரு தங்க பதக்கம் வாங்கவே இந்தியா முக்கு முக்கென்று முக்குகிறது.

இத்தனைக்கும் மக்கள் தொகையில் சீனாவோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் விளையாட்டில் தங்கம் வாங்குவதற்கு பதிலாக, நகை கடையில் காசு கொடுத்து வாங்கினால் தான் உண்டு என்னும் அவல நிலை தான் இன்னும் இந்தியாவில்.

காரணம் இந்தியாவில் எந்த விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில்லை, பணம் செலவு செய்வதில்லை, கிரிக்கெட் என்னும் வீணா போன விளையாட்டை தவிர.

கிரிக்கெட் விளையாண்டால் மட்டும் தான், இந்தியாவில் தினம் தோறும் கோடீஸ்வரன், மற்ற விளையாட்டு வீரர்களை எல்லாம் எவரும் கண்டு கொள்ள கூட தயாராக இல்லை. எப்படி விளங்கும் இந்த தேசம்?

காமன்வெல்த் விளையாட்டு என்ற பெயரில் உலக அரங்கில் இந்தியா கேவலப்பட்டு ,அசிங்கப்பட்டு நின்றதை போன்ற சொதப்பல் வேலைகளை, ஒலிம்பிக் விளையாட்டு நடத்தும் போது சீனர்கள் செய்யவில்லை.

வெள்கைக்காரன் கொடுத்த காசையே அவனுக்கு தெரியாம ஆட்டைய போடுற திருட்டு பயலுகளை வச்சுக்கிட்டு இந்தியா எப்படி வளரும்?
காமன்வெல்த் புகழ் கல்மாடி, எந்த சிக்கலும் இன்றி சந்தோசமா சுத்திகிட்டு இருக்கின்றார்.

ராணுவ வீரர்களுக்கு வீடுகள் வாங்கியதில் ஊழல், உடைகள் வாங்கியதில் ஊழல், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், நிலக்கரி வாங்கியதில் ஊழல், அணு உலையில் ஊழல், அலைக்கற்றையில் ஊழல், விளையாட்டு ஊழல், கால்நடை தீவன ஊழல், மருந்து வாங்கியதில் ஊழல் இப்படி ஊழல் இல்லாத எந்த துறையும் இந்தியாவில் இல்லை என்று நாம் ஊழல் குறித்து காலம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் அளவுக்கு ஊழல்.

கடந்த வாரம், சீனாவின் முந்தைய ஆட்சியின், போக்குவரத்து அமைச்சர் ஒருவருக்கு, மரண தண்டனை வழங்கி இருக்கிறார்கள். இத்தனைக்கும் சீனாவின் போக்குவரத்தில் அதிக மாற்றங்கள் கொண்டு வந்த,அதிவேக ரயில்கள் வர காரணமாய் இருந்தவர்.

அவருடைய இருபது ஆண்டு கால அரசியலில், இருபது கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.இருபது கோடி ஊழலுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிற்கிறார்.அந்த அளவுக்கு கடுமையான சட்டங்களும், தண்டனைகளும்.

இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் குற்றம் நிரூபிக்கப்பட்டதும், அவர் சார்ந்த கட்சியே, அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். நடக்குமா இந்தியாவில்?

இருபது வருடத்திற்கு மேலாக, டான்சி நிலம் மற்றும் அதிக பொருள் சேர்ந்த வழக்கு ஜெயலலிதாவின் பெயரில். ஆனால் இந்த வழக்கு இன்னும் ஒரு முப்பது ஆண்டுகள் போனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

கருணாநிதி குடும்ப புகழ் அலைக்கற்றை ஊழல், முடிய இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் ஆகலாம். குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர். இதெல்லாம் விளங்கவா?

சீனா வளர்ச்சியில் தொட முடியாத உயரத்தை தொட்டுக்கொண்டே இருக்கட்டும்.

நாமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான், சீனாவை விட நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்க தான் தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசு என்று.

முதலில் சீனாவில் இருப்பதை போன்ற ஒரு மாதிரி நகரத்தை,
இந்தியாவில் உருவாக்கி காட்டுங்கள். பிறகு பேசலாம் யார் வல்லரசு என்று.

சீனாவில் குறைகளே இல்லையா? குறைகள் இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய, அடிப்படை வசதிகளை எல்லாம் தரமாக செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

இந்தியாவின் அடிப்படை சாலைகள்,சுத்தமான குடி தண்ணீர், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றவை இன்னும் சாதாரண மக்களுக்கு கூட முழுமையாய் போய் சேரவில்லை.

இதை எல்லாம் செய்த பிறகு வல்லரசு ஆகுங்கள், சீனாவோடு போட்டி போடுங்கள். அதுவரை மக்கள் தொகையில் வேண்டுமானால் இந்தியா, சீனாவோடு போட்டி போட்டு கொள்ளட்டும்:)

-ஆன்டனி வளன்

திங்கள், 22 ஜூலை, 2013

இந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண்டா?



தமிழக முதல்வர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று, சட்டசபையில் சரத்குமார் பேசுகிறார். இதே போல், அ.தி. மு.க.,வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று பேசுகின்றனர்.
 தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, "சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட, வேஷ்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும்' என்கிறார். ஆக, இந்தியாவின் தென் கோடி மாநிலமாம், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனும், பிரதமராக வர முடியும் என்று, பேசும்படியான நிலை, தற்போது உள்ளது. உத்தர பிரதேச அகிலேஷ் யாதவும், இங்கு வந்திருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, "எங்கள் கட்சி அதிக சீட்கள் ஜெயித்தால், என் தந்தை பிரதமராவதற்கு, நீங்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறிச் சென்றார். 
தற்போது, நிலவி வரும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை, மாபெரும் ஊழல்களால், திறமையற்ற நிர்வாகத்தால், சீரிய தலைமையின்மையால், காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு, தேசியக் கட்சிகள் பெரும்பான்மை பெற முடியாத நிலை போன்றவற்றால், தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு, கூடுதலாக தோன்றுகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க., 30 இடங்களுக்கு மேல் ஜெயித்து, தேசியக் கட்சிகள் எதற்கும் பெரும்பான்மை இல்லை என்னும் நிலை வரும் போது, பிரதமரோ அல்லது துணைப் பிரதமர் பதவியோ, ஜெயலலிதாவிற்கு கிடைக்க வாய்ப்புண்டு. 
அதற்கான தகுதிகள் அவருக்கு உண்டா என்றால், உண்டு என்றே சொல்லலாம். தற்போது, அனைத்து விமர்சகர்களும், நரேந்திர மோடி பிரதமராக வந்தால், நன்றாக இருக்கும் என்றே கூறுகின்றனர். அவருடன் ஒப்பிடுவோமேயானால், ஜெயலலிதாவும் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஏழு மொழிகள் பேசத் தெரியும்; நான்கு மொழிகள் எழுத, படிக்கத் தெரியும். மிகப் பரந்த தொலை நோக்கு பார்வை உடையவர். அவரும், உலகறிந்த ஒரு பிரபலமான அரசியல் தலைவரும் கூட. எந்த ஒரு விஷயத்திலும், துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனால், தமிழனின் தலை எழுத்து, என்ன என்பதற்கு, இனி வரும் காலம் தான், பதில் சொல்ல வேண்டும்.

சனி, 20 ஜூலை, 2013

என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க….

"என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க….

கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
"என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க….

கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்!




எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்!

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.

எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.

இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.

எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.

ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

நன்றி : ஆரோக்கியமான வாழ்வு

தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

இரண்டே மாதத்தில் 20 கிலோ வெயிட் குறைப்பது எப்படி?

இரண்டே மாதத்தில் 20 கிலோ வெயிட் குறைப்பது எப்படி? கடல் துளசியின் மருத்துவக்குறிப்புகள் !!!

”சில மாசங்களுக்கு முன்னாடி வரைக்கும் நான் அவ்ளோ குண்டா இருப்பேன். 86 கிலோ. சிரிச்சேன்னா, என் ரெண்டு கன்னங்களும் அப்படியே ரெண்டு கண்ணையும் மறைச்சிடும். ஆனால், ரெண்டே மாசத்துல 20 கிலோ வரைக்கும் வெயிட்டைக் குறைச்சேன்.” – ‘எப்பூடி?’ எனக் கேட்டுச் சிரிக்கிறார் ‘கடலில்’ முளைத்திருக்கும் துளசி. ராதாவின் இரண்டாவது மகள்.

”எப்படி உங்க எடையைக் குறைச்சீங்க?”

”அட, அதை ஏன் கேக்குறீங்க? அதுக்கு நான் ரொம்பவே சிரமப்பட்டுட்டேன். மணி சார் என்னைப் பார்க்க வரும் வரை என் உடல்நலம் பத்திக் கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல்தான் இருந்தேன். நிறையச் சாப்பிடுவேன். மும்பையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகள் ஒண்ணுவிடாமல் தேடித்தேடிப் போய்ச் சாப்பிடுவேன். ஜங்க் ஃபுட்ஸ் வெளுத்துக்கட்டுவேன்.

அம்மாவும், ‘சின்னப் பொண்ணுதானே சாப்பிட்டுட்டுப் போறா’னு கண்டுக்காம விட்டுட்டாங்க. அதனால பயங்கர வெயிட் போட்டுட்டேன். அப்பதான் மணி சார் ‘கடல்’ படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தார். என்னைப் பார்த்ததுமே, ‘நீதான் பியா கேரக்டர் பண்ற… அதுக்காக நீ வெயிட் குறைச்சே ஆகணும்’னு ஸ்ட்ரிக்ட்டா சொன்னார். மணி சார் படம்னா, மலையில இருந்துகூடக் குதிக்கலாம். கடகடனு மெனக்கெட்டு வெயிட்டைக் குறைச்சேன்.

சாப்பாடு விஷயத்தில் ரொம்ப கன்ட்ரோலா இருந்தேன். ஆனால், அந்த டைம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணலை, அதே சமயம் வீட்டுல என்னைத் தவிர மத்தவங்க எல்லாரும் நல்லாச் சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாங்க. அதைப் பார்த்துப் பொறாமையாகி நானும் பழையபடி கன்னாபின்னானு சாப்பிட ஆரம்பிச்சுப் பழைய கண்டிஷனுக்கே வந்துட்டேன். அந்த நேரம் பார்த்து மணி சார் திரும்ப வந்து என்னைப் பார்த்து டென்ஷன் ஆகிட்டார். நான் அழுதுட்டேன். அதுக்கு அப்புறம்தான் எனக்குள்ளே ஒரு வெறி வந்து, முன்னைவிட அதிகமா முயற்சிகள் செய்து வெயிட்டைக் குறைச்சேன்.”


”அப்படி என்ன முயற்சிகள் செஞ்சீங்க?”

”டயட் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தேன். கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் பொருட்களைச் சாப்பிடவே மாட்டேன். அதற்குப் பதிலாக புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட ஆரம்பிச்சேன். காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறையச் சாப்பிடுவேன். முன்னாடி எல்லாம் காலையில் லேட்டாத்தான் எழுந்திருப்பேன். அதுவே நம்ம உடம்புக்கு நிறையக் கெடுதல் பண்ணும்னு எனக்கு லேட்டாத்தான் புரிஞ்சது. அதனால சீக்கிரமாவே எழுந்திரிக்கப் பழகினேன். நாள் தவறாமல் ஜிம் போனேன். ஜிம்முக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ். ஜிம்ல ஒரு மணி நேரம் சின்ஸியரா கார்டியோ ஒர்க் அவுட்ஸ் பண்ணுவேன்.

ரன்னிங் போவேன். இதை எல்லாம் ரொம்ப விரும்பிப் பண்ணுவேன். கொஞ்சம் போர் அடிச்சாலும் அப்படியே நிறுத்திட்டு பாட்டுக் கேட்டு என்னை ரிலாக்ஸ் பண்ணிட்டுத் திரும்பவும் பயிற்சி களை ஆரம்பிப்பேன். காலையில் ஏதாவது பழரசம் ஒரு கப். மதியம், ரெண்டு ரொட்டியும் முட்டையோட வெள்ளைக்கரு ஆறு துண்டுகளும், கோழிக் கறி கொஞ்சமும் சாப்பிடுவேன். சாயந்திரம் எதுவும் சாப்பிட மாட்டேன். ராத்திரி ஒரு கப் பழரசம் மட்டும் குடிப்பேன். இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செஞ்சேன். அதுக்கு அப்புறம்தான் 86 கிலோ இருந்த என் வெயிட், 20 கிலோ குறைஞ்சது. அப்புறம்தான் க்யூட் பேபி ஆனேன்.”

”அழகை மேம்படுத்த என்ன பண்ணுனீங்க?”

”ஜூஸ். இதுதான் என் அழகு ரகசியம். எவ்வளவுக்கு எவ்வளவு பழங்களோட ஜூஸ் நம்ம உடம்பில் சேருதோ, அந்த அளவு நம்ம தோல் பளபளப்பாகும். குறிப்பா முகப் பளபளப்பிற்கு ஜூஸ் வகைகள் ரொம்பவே நல்லது. அழகை அதிகரிக்கும் சக்தி சந்தனத்துக்கு இருக்கு. அதனால், அடிக்கடி சந்தன ஃபேஷியல் செஞ்சுக்குவேன். சந்தனம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. தரமான காஸ்மெட்டிக் பொருட்களை மட்டும்தான் பயன்படுத்துவேன். தலைமுடியில் அயர்னிங், கர்லிங் போன்ற வேலைகளைச் செய்ய மாட்டேன். அடிக்கடி முட்டையின் வெள்ளைக்கருவை தலைமுடியில் வைத்து அலசுவேன். வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துப்பேன். இது தலைமுடி கருப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.”

”ரிலாக்ஸேஷன்ஸ்?”

”தூக்கம்தான். கூடவே, ஐ லவ் மியூசிக். நிறைய சூப்பர் பவர் ஹீரோ புக்ஸ் படிப்பேன். அதில் வரும் சாகசங்களைப் படிக்கும்போது, தானாகவே நம்ம மனசு கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சுடும். அதைத் தொடர்ந்து மனசு பரவசமாகிடும். மனசை ரிலாக்ஸ் பண்ண இதுவும் ஒரு நல்ல வழி!”

”துறுதுறுன்னு எப்போதும் செம ஜாலியா இருக்கீங்களே… எப்படி?”

”முன்னாடி எல்லாம் நான் ரொம்ப அமைதியா இருப்பேன். வீட்டுல உள்ளவங்ககிட்டகூட அதிகம் பேச மாட்டேன். எப்போதும் தனியாத்தான் இருப்பேன். ஆனால், இப்போ அப்படி இல்லை. நான் இப்படி சந்தோஷமா மாறினதுக்கு ‘கடல்’ படத்தில் நான் பண்ணின கேரக்டரான பியாதான் காரணம். ஏன்னா அவ அப்படிப்பட்டவ. அவளோட ஆக்டிவிட்டீஸ் அவ்வளவு அழகா இருக்கும். அவளாலதான் நான் இப்படி மாறினேன். அவளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். அந்த கேரக்டர்ல நான் நடிச்சதுக்கு அப்புறம் என் லைஃப் இப்போ இன்னும் சந்தோஷமா மாறி இருக்கு. தேங்க்ஸ் பியா!”
இரண்டே மாதத்தில் 20 கிலோ வெயிட் குறைப்பது எப்படி? கடல் துளசியின் மருத்துவக்குறிப்புகள் !!!

”சில மாசங்களுக்கு முன்னாடி வரைக்கும் நான் அவ்ளோ குண்டா இருப்பேன். 86 கிலோ. சிரிச்சேன்னா, என் ரெண்டு கன்னங்களும் அப்படியே ரெண்டு கண்ணையும் மறைச்சிடும். ஆனால், ரெண்டே மாசத்துல 20 கிலோ வரைக்கும் வெயிட்டைக் குறைச்சேன்.” – ‘எப்பூடி?’ எனக் கேட்டுச் சிரிக்கிறார் ‘கடலில்’ முளைத்திருக்கும் துளசி. ராதாவின் இரண்டாவது மகள்.

”எப்படி உங்க எடையைக் குறைச்சீங்க?”

”அட, அதை ஏன் கேக்குறீங்க? அதுக்கு நான் ரொம்பவே சிரமப்பட்டுட்டேன். மணி சார் என்னைப் பார்க்க வரும் வரை என் உடல்நலம் பத்திக் கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல்தான் இருந்தேன். நிறையச் சாப்பிடுவேன். மும்பையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகள் ஒண்ணுவிடாமல் தேடித்தேடிப் போய்ச் சாப்பிடுவேன். ஜங்க் ஃபுட்ஸ் வெளுத்துக்கட்டுவேன்.

அம்மாவும், ‘சின்னப் பொண்ணுதானே சாப்பிட்டுட்டுப் போறா’னு கண்டுக்காம விட்டுட்டாங்க. அதனால பயங்கர வெயிட் போட்டுட்டேன். அப்பதான் மணி சார் ‘கடல்’ படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தார். என்னைப் பார்த்ததுமே, ‘நீதான் பியா கேரக்டர் பண்ற… அதுக்காக நீ வெயிட் குறைச்சே ஆகணும்’னு ஸ்ட்ரிக்ட்டா சொன்னார். மணி சார் படம்னா, மலையில இருந்துகூடக் குதிக்கலாம். கடகடனு மெனக்கெட்டு வெயிட்டைக் குறைச்சேன்.

சாப்பாடு விஷயத்தில் ரொம்ப கன்ட்ரோலா இருந்தேன். ஆனால், அந்த டைம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணலை, அதே சமயம் வீட்டுல என்னைத் தவிர மத்தவங்க எல்லாரும் நல்லாச் சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாங்க. அதைப் பார்த்துப் பொறாமையாகி நானும் பழையபடி கன்னாபின்னானு சாப்பிட ஆரம்பிச்சுப் பழைய கண்டிஷனுக்கே வந்துட்டேன். அந்த நேரம் பார்த்து மணி சார் திரும்ப வந்து என்னைப் பார்த்து டென்ஷன் ஆகிட்டார். நான் அழுதுட்டேன். அதுக்கு அப்புறம்தான் எனக்குள்ளே ஒரு வெறி வந்து, முன்னைவிட அதிகமா முயற்சிகள் செய்து வெயிட்டைக் குறைச்சேன்.”

”அப்படி என்ன முயற்சிகள் செஞ்சீங்க?”

”டயட் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தேன். கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் பொருட்களைச் சாப்பிடவே மாட்டேன். அதற்குப் பதிலாக புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட ஆரம்பிச்சேன். காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறையச் சாப்பிடுவேன். முன்னாடி எல்லாம் காலையில் லேட்டாத்தான் எழுந்திருப்பேன். அதுவே நம்ம உடம்புக்கு நிறையக் கெடுதல் பண்ணும்னு எனக்கு லேட்டாத்தான் புரிஞ்சது. அதனால சீக்கிரமாவே எழுந்திரிக்கப் பழகினேன். நாள் தவறாமல் ஜிம் போனேன். ஜிம்முக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ். ஜிம்ல ஒரு மணி நேரம் சின்ஸியரா கார்டியோ ஒர்க் அவுட்ஸ் பண்ணுவேன்.

ரன்னிங் போவேன். இதை எல்லாம் ரொம்ப விரும்பிப் பண்ணுவேன். கொஞ்சம் போர் அடிச்சாலும் அப்படியே நிறுத்திட்டு பாட்டுக் கேட்டு என்னை ரிலாக்ஸ் பண்ணிட்டுத் திரும்பவும் பயிற்சி களை ஆரம்பிப்பேன். காலையில் ஏதாவது பழரசம் ஒரு கப். மதியம், ரெண்டு ரொட்டியும் முட்டையோட வெள்ளைக்கரு ஆறு துண்டுகளும், கோழிக் கறி கொஞ்சமும் சாப்பிடுவேன். சாயந்திரம் எதுவும் சாப்பிட மாட்டேன். ராத்திரி ஒரு கப் பழரசம் மட்டும் குடிப்பேன். இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செஞ்சேன். அதுக்கு அப்புறம்தான் 86 கிலோ இருந்த என் வெயிட், 20 கிலோ குறைஞ்சது. அப்புறம்தான் க்யூட் பேபி ஆனேன்.”

”அழகை மேம்படுத்த என்ன பண்ணுனீங்க?”

”ஜூஸ். இதுதான் என் அழகு ரகசியம். எவ்வளவுக்கு எவ்வளவு பழங்களோட ஜூஸ் நம்ம உடம்பில் சேருதோ, அந்த அளவு நம்ம தோல் பளபளப்பாகும். குறிப்பா முகப் பளபளப்பிற்கு ஜூஸ் வகைகள் ரொம்பவே நல்லது. அழகை அதிகரிக்கும் சக்தி சந்தனத்துக்கு இருக்கு. அதனால், அடிக்கடி சந்தன ஃபேஷியல் செஞ்சுக்குவேன். சந்தனம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. தரமான காஸ்மெட்டிக் பொருட்களை மட்டும்தான் பயன்படுத்துவேன். தலைமுடியில் அயர்னிங், கர்லிங் போன்ற வேலைகளைச் செய்ய மாட்டேன். அடிக்கடி முட்டையின் வெள்ளைக்கருவை தலைமுடியில் வைத்து அலசுவேன். வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துப்பேன். இது தலைமுடி கருப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.”

”ரிலாக்ஸேஷன்ஸ்?”

”தூக்கம்தான். கூடவே, ஐ லவ் மியூசிக். நிறைய சூப்பர் பவர் ஹீரோ புக்ஸ் படிப்பேன். அதில் வரும் சாகசங்களைப் படிக்கும்போது, தானாகவே நம்ம மனசு கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சுடும். அதைத் தொடர்ந்து மனசு பரவசமாகிடும். மனசை ரிலாக்ஸ் பண்ண இதுவும் ஒரு நல்ல வழி!”

”துறுதுறுன்னு எப்போதும் செம ஜாலியா இருக்கீங்களே… எப்படி?”

”முன்னாடி எல்லாம் நான் ரொம்ப அமைதியா இருப்பேன். வீட்டுல உள்ளவங்ககிட்டகூட அதிகம் பேச மாட்டேன். எப்போதும் தனியாத்தான் இருப்பேன். ஆனால், இப்போ அப்படி இல்லை. நான் இப்படி சந்தோஷமா மாறினதுக்கு ‘கடல்’ படத்தில் நான் பண்ணின கேரக்டரான பியாதான் காரணம். ஏன்னா அவ அப்படிப்பட்டவ. அவளோட ஆக்டிவிட்டீஸ் அவ்வளவு அழகா இருக்கும். அவளாலதான் நான் இப்படி மாறினேன். அவளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். அந்த கேரக்டர்ல நான் நடிச்சதுக்கு அப்புறம் என் லைஃப் இப்போ இன்னும் சந்தோஷமா மாறி இருக்கு. தேங்க்ஸ் பியா!”

வெள்ளி, 19 ஜூலை, 2013

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி!

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

 

 

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்

ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.